கடந்த ஒரு மாதமாக அதிமுக, திமுக என இரண்டு கூட்டணியிலும் பேசி வந்த தேமுதிக, தற்போது தன்னுடைய பிடிவாதத்தால் இரு கூட்டணியிலும் இடம் கிடைக்காமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 4ல் இருந்து 3க்கு இறங்கிய அதிமுக கூட்டணியில் இணைவதைவிட தனித்து நின்று தங்கள் பலத்தை காட்ட தேமுதிக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் தேமுதிக தலைமையில் கமல், சீமான், சரத்குமார் கட்சிகள் இணையவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த புதிய கூட்டணியில் தேமுதிக 20 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் ஏனைய 20 தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த கூட்டணிக்கு கமல், சீமான், சரத்குமார் ஓகே சொல்லிவிட்டதாகவும், நாளை விஜயகாந்த் தலைமையில் கூடவிருக்கும் கூட்டத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
விஜயகாந்த் தலைமையிலான மூன்றாவது அணி வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றாலும் பெரும்பாலான வாக்குகளை பிரித்து இரண்டு கூட்டணியில் ஒரு கூட்டணியை படுதோல்வி அடைய செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.,