Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை எதிரொலி: ட்ரோன்கள் பறக்க தடை..!

Advertiesment
Amitshah

Siva

, புதன், 5 மார்ச் 2025 (07:28 IST)
அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் பயிற்சி மையத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வருகை தர உள்ளதை ஒட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க விட மாவட்ட காவல்துறை தடை விதித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
வருகின்ற 06.03.2025 மற்றும் 07.03.2025 ஆகிய தேதிகளில் மண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பயிற்சி மையத்திற்கு வருகை தர உள்ளார்.
 
எனவே இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் 06.03.2025 மற்றும் 07.03.2025 ஆகிய தேதிகளில் இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதையும் ட்ரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial Vehicles) பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளார்.
 
மேலும் பாதுகாப்பு காரணமாக ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!