ஆம்னி பேருந்துகள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதாகவும், சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை விடுவிக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும் என்றும், வேலை நிறுத்தம் வாபஸ் என்றும், தென் மாநில ஆம்னி பேருந்துகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் 3 கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பினர் பேட்டி அளித்துள்ளனர்.
தமிழக போக்குவரத்து துறை இணைசெயலாளருடன் பேச்சுவார்த்தைக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தவறுதலாக சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை நாளைக்குள் விடுவிக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.