Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர் விடுமுறை.. பேருந்து, ரயில்களில் குவியும் மக்கள்! – 3 லட்சம் பேர் பயணம்!

Bus Depot
, ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (12:56 IST)
ஆயுத பூஜை, வார இறுதி நாட்கள் சேர்ந்து வருவதால் தொடர் விடுமுறைக்காக மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.



வார இறுதி நாட்களான சனி, ஞாயிறை தொடர்ந்து திங்கள், செவ்வாயில் ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறைகள் வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறையை கொண்டாட பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். இதனால் பேருந்துகள், ரயில்கள் கூட்டமாக காணப்படுகிறது.

இதனால் சென்னையில் இருந்து பல வழித்தடங்களிலும் போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 5,664 சிறப்பு பேருந்துகளில் 3 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். நேற்று மட்டும் தினசரி இயங்கும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 813 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இஸ்ரேலுக்காக போர்களம் போகவும் தயங்க மாட்டேன்! – பிரபல நடிகை அறிவிப்பு!