Webdunia - Bharat's app for daily news and videos

Install App

+2 மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி...முதல்வர் ஸ்டாலின் ஆணை

Webdunia
சனி, 31 ஜூலை 2021 (17:04 IST)
முதல்வர் ஸ்டாலின் , 2016 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமச் சட்டப்பிரிவு( 17) 1ன் படி அவர்களுக்குத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் அனைவரும் தேச்ச்சி பெற்றதாகவும்  ஆணை பிறப்பித்துள்ளார்.

கடந்த வருடம் சீனாவில் இருந்து முதன் முதலில் கொரொனா தொற்று உருவான நிலையில், தற்போது கொரொனா இரண்டாம்  அலை பரவி வருகிறது. இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  மூன்று வாரங்களாகக் குறைந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது  ஊரடங்கில் சில தளர்வுகல் அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில்  சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் 2021 ஆண்டு பிளஸ்2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. சமீபத்தில் மாணவர்களுக்கான மதிப்பெண் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள துணைத் தேர்வுகளைத் தனித் தேர்வுகளாக எழுத மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

எனவே, முதல்வர் ஸ்டாலின் , 2016 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமச் சட்டப்பிரிவு( 17) 1ன் படி அவர்களுக்குத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் அனைவரும் தேச்ச்சி பெற்றதாகவும் பிறப்பித்துள்ளார்.

மாணவர்கள அனைவருக்கும் மதிப்பெண் வழங்குவதற்காக நடைமுறை வடிவமைத்து உரிய ஆணை தமிழகப் பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை: முக்கிய குற்றவாளி கைது..!

முதல்வர் அதிஷி போலி விரைவில் கைது செய்யப்படுவார்: அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தகவல்..!

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை: 3 தனிப்படைகள் அமைப்பு

வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு நாள்.. த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை

அடுத்த கட்டுரையில்
Show comments