கூட்டணி இல்லை.. ஆனால் பாஜகவை விமர்சிக்க வேண்டாம்.. அதிமுக தலைமை அறிவுரை..!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (09:24 IST)
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று நேற்று அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் பாஜகவையும் அதன் தலைவர்களையும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்று அதிமுக தலைமை தொண்டர்களுக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பாஜக குறித்து பொதுவெளியில் கடுமையாக விமர்சனம் செய்ய வேண்டாம் என முக்கிய நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்திய நிலையில் கட்சி தலைமையால் அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர வேறு யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது. 
 
வேறு கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு எடுப்பார் என்றும் கூட்டணி குறித்து பொதுவெளியில் இறுதி முடிவு எடுக்கும் வரை அதிமுக நிர்வாகிகள் ஊடகங்களில் கூட்டணி குறித்து பேட்டியளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments