திருமலை கோவில் பிரம்மோற்சவம் இன்றுடன் நிறைவு.. கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (08:04 IST)
கடந்த சில நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்பதும் நான்கு மாட வீதிகளில் தேர் வலம் வந்தது என்பதையும் பார்த்தோம். 
 
பிரம்மோற்சவத்தை ஒட்டி ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தந்தனர் என்பதும் இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இன்றுடன் நிறைவடைகிறது. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைந்தது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
பிரமோற்சவம் முடிவடைந்ததை அடுத்து கோவில் திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருமலையில் திருக்குளத்தை சுற்றியிருந்த பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.
 
தீர்த்தவாரிக்குப் பிறகு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் இல்லாத அதிமுக.. தீய சக்தி திமுக.. ஈரோட்டில் அடித்த ஆடிய விஜய்..!

அனல் பறந்த விஜய்யின் 31 நிமிட பேச்சு.. செங்கோட்டையனின் பக்கா ஸ்கெட்ச் வெற்றி..!

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் VP-G Ram G மசோதா.. கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்..!

ஆஸ்கார் நேரலை ஒளிபரப்பு.. இனி யூடியூபில் மட்டுமே.. 5 வருடங்களுக்கு ஒப்பந்தம்..!

ஈரோட்டில் பொதுக்கூட்டம்!.. யாருன்னு காட்டுறேன்.. செங்கோட்டையன் போட்ட ஸ்கெட்ச்!...

அடுத்த கட்டுரையில்
Show comments