''எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தது பாஜக தான். எடப்பாடி நன்றி மறந்துவிட்டார்'' என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக, அதிமுக,பாஜக இடையே சமீபத்தில் கருத்து மோதல் அதிகரித்து வந்த நிலையில், அதிமுக பாஜக கூடணியில் விரிசல் ஏற்பட்டது. எனவே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் இன்று கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெரும்பாலான மா.செக்கள், பாஜகவுடன் ஏற்பட்ட கசப்புணர்வு காரணமாக அக்கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.
இத நிலையில், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறியதால் அதிமுக தலைமை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கூறியுள்ளதாவது: எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தது பாஜக தான். எடப்பாடி நன்றி மறந்துவிட்டார். அதிமுகவில் இருந்து விலகியதில் எங்களுக்கு எந்தவித நஷ்டமும் கிடையாது அதிமுகவிற்குத்தான் நஷ்டம் என்று தெரிவித்துள்ளார்.