Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திப்பு

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (12:54 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் விடுதலை ஆன நிலையில் அதிமுகவை சேர்ந்த பலர் அவரது அணிக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறையில் இருந்து விடுதலையாகி வந்தது முதல் அமைதியாக இருந்த சசிகலா தற்போது அரசியல் ஆட்டத்தை தொடங்கிவிட்டார் 
 
முதல்கட்டமாக சரத்குமார் மற்றும் பாரதிராஜா ஆகியோர்களை சந்தித்த சசிகலா சற்றுமுன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்துள்ளார். அடுத்தடுத்து நடந்த இந்த சந்திப்பில் அரசியல் கூட்டணி குறித்து பேசுவதற்காகவே என்று கூறப்படுகிறது
 
மேலும் கமல்ஹாசன், பிரேமலதா விஜயகாந்த் உள்பட மேலும் ஒரு சிலரை சசிகலா சந்திக்க இருப்பதாகவும் அதிமுக மற்றும் திமுக கூட்டணிக்கு மாற்றாக ஒரு பலமான கூட்டணியை அவர் அமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
அதிமுக, திமுக கூட்டணியில் போதுமான இடம் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் கட்சிகளை எல்லாம் அவர் அழைக்க முடிவு செய்திருப்பதாகவும் இதனால் அதிமுக திமுக கூட்டணிக்கு நெருக்கடிகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments