Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்! – குடியரசு தலைவர் திறந்து வைத்தார்!

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (12:51 IST)
குஜராத்தில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொட்டேரா கிரிக்கெட் மைதானத்தை குடியரசு தலைவர் திறந்து வைத்தார்.

கிரிக்கெட் விளையாட்டில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கிரிக்கெட்டுக்காக உலகிலேயே பிரம்மாண்டமான பெரிய மைதான் உருவாக்கும் பணிகள் நடைபெற்றன.

குஜராத் மாநிலம் அகமதாப்பாத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட மைதானத்திற்கு சர்தார் படேல் மொட்டேரா மைதானம் என பெயரிடப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.

இதுவரை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானமே உலகின் பெரிய மைதானமாக இருந்த நிலையில் அதை மொட்டேரா மைதானம் பின்னுக்கு தள்ளியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments