Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலா வந்ததும், அதிமுககாரங்க போய் விழுவாங்க பாருங்க... சு.சுவாமி தடாலடி!

Advertiesment
சசிகலா வந்ததும், அதிமுககாரங்க போய் விழுவாங்க பாருங்க... சு.சுவாமி தடாலடி!
, சனி, 23 நவம்பர் 2019 (12:49 IST)
சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுகவினர் அவரிடம் தான் செல்வார்கள் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
 
சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பாகி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 4 வருடம் சிறை தண்டனை விதித்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன்.  
 
இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து இன்னும் சில மாதங்களில் வெளியே வந்துவிடுவார் என செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது. கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை தண்டனை காலத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யும் என கூறப்பட்டது.  
 
ஆனால், தற்போது கர்நாடக சிறைத்துறை இயக்குனர் மெக்ரித், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது. தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் என கூறினார்.  
webdunia
இதனைத்தொடர்ந்து சசிகலா அதிமுகவில் இனைவது குறித்து பல கருத்துக்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அதிமுகவில் உள்ள சிலர் சசிகலாவை கட்சியில் இணைத்துக்கொள்ள மாட்டோம் எனவும், சிலர் இது குறித்து தலைமைதான் முடிவு செய்யும் எனவும் கூறி வரும் நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இது குறித்து பேசியுள்ளார். 
 
அவர் கூறியதாவது, சசிகலா இன்னும் ஓன்று அல்லது ஒன்றைரை ஆண்டுக்குள் விடுதலையாகி வருவார். கட்சியை நல்ல முறையில் அமைப்புகளோடு நடத்த அவருக்கு திறமை உள்ளது. அவர் வெளியே வந்தவுடன் அதிமுகவினர் அவரிடம் தான் செல்வார்கள் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை ஆதிக்குடிகள்: 200 ஆண்டுகள் பழமையான வேடர்களின் மண்டை ஓடுகள் ஒப்படைப்பு