Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினகரன் - சசிகலா மோதலா...? பரபரக்கும் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம்

Advertiesment
தினகரன் - சசிகலா மோதலா...? பரபரக்கும் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம்
, வியாழன், 21 நவம்பர் 2019 (15:44 IST)
சசிகலாவை சந்திக்க சென்ற தினகரன் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து அவரை சந்திக்காமல் திரும்பி வந்துள்ளாராம். 
 
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் சமீபத்தில் சசிகலாவை சந்திக்க சென்ற தினகரன் அவரை சந்திக்காமல் திரும்பினார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
ஆம், சிறை தரப்பில் தினகரனை திருப்பி அனுப்பியிருக்க வாய்ப்பு இருக்காது எனவும் கூறப்படுகிறது. ஒருவேளை சசிகலாவே தினகரனை சந்திக்க விருப்பம் இல்லை என்று திருப்பி அனுப்பி இருக்க வாய்ப்பு இருக்கிறதாக தெரிகிறது. 
webdunia
ஆனால், ஒரு மணி நேரத்திற்கும் மேல் தினகரன் சசிகலாவை சந்திக்க காத்திருந்ததாகவும் பின்னர் சசிகலாவை சந்திக்காமல் திரும்பி சென்றதாகவும் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் பேசிக்கொள்ளப்படுகிறதாம். தினகரன் மீதுள்ள அதிருப்தியால் சசிகலா தனது கோபத்தை வெளிப்படுத்தவே தினகரனை காக்க வைத்து சந்திக்காமல் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.  
 
டிடிவி தினகரனை சசிகலா சந்திக்காமல் திருப்பி அனுப்பியது இது முதல்முறை அல்ல . இதற்கு முன்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு இரட்டை இலையை பெறுவதற்காக லஞ்சம் வழங்கிய வழக்கில் டிடிவி தினகரன் டெல்லி போலீஸ் பிடியில் சிக்கிய போதும் சசிகலா தினகரனை சந்திக்க மறுத்துவிட்டார், அதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் தினகரனை சந்திக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமர் கோவில் கட்ட 500 கோடி அளித்தாரா அம்பானி??