Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அதிமுக பிரம்மாண்ட மாநாடு – கூட்டணிக் கட்சிகள் பங்கேற்பு !

Webdunia
திங்கள், 4 மார்ச் 2019 (16:26 IST)
சென்னையில் அதிமுக தலைமையில் பிரம்மாண்ட கூட்டணிக் கட்சிகளுடனான மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுகக் கூட்டணியில்யில் இணைந்துள்ள பாமக  மற்றும் பாஜக ஆகியக் கட்சிகளுக்கு 12 தொகுத்களை ஒதுக்கியுள்ளது அதிமுக. அதுபோல தேமுதிக உடனானக் கூட்டணிப் பேச்சுவார்த்தையும் இறுதிக் கட்டத்தில் உள்ளது. அது உறுதியானதுடன் தொகுதிப்பங்கீடு குறித்து முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பாரக்கப்படிகிறது.

அதுபோல மறுமுனையிலும் திமுக தலைமையிலான காங்கிரஸ் , இடதுசாரிகள், விசிக, மதிமுக ஆகியக் கட்சிகள் அடங்கிய மெகாக் கூட்டணி உருவாகியுள்ளது. இதனையடுத்து திமுக கூட்டணியை விட அதிமுக கூட்டணிக்கு மக்களின் ஆதரவு குறைவாக இருப்பதாகப் பேசப்பட்டு வருகிறது.

இதனால் தங்கள் பலத்தை நிரூபிக்கும் பொருட்டுத் தங்கள் கட்சியில் உள்ள கூட்டணிக் கட்சிகளை எல்லாம் இணைத்து ஒரு பிரம்மாண்ட மாநாட்டை சென்னையில் நடத்த அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள என எதிர்பார்க்கப்படுகிறது.

இது சம்மந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் அதிமுக தலைமையிலான தேர்தல் அறிக்கையும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments