Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர் .. பரபரப்பு சம்பவம் !

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (21:31 IST)
சிதம்பரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்  ஒருவர் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் தமிழகத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் மாவட்டம் அருகே ஸ்ரீமுஷ்ணம் படைவீட்டு மாரியம்மன் கோவில் என்னும் பகுதியில்  அதிமுக நிர்வாகியாக திருமுருகன் என்பவர் வசித்து வருகிறார். 
 
இந்நிலையில் இவர் சில மாதங்களுக்கு முன்னர், ஒரு 17 வயது சிறுமியை வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றுள்ளார்.  அப்போது இருவருக்கும் நெருங்கி பழகியுள்ளதாகத் தெரிகிறது. 
 
இந்நிலையில் இருவரும் அங்குள்ள விடுதியில் தங்கி உல்லாசம் அனுபவித்துள்ளனர். பின்னர்  அந்த சிறுமி திடீரென்று கருவுற்றாள். இது அப்பெண்ணின் வீட்டிற்கு தெரிந்து பெரும் பிரச்சனையாகும் முன், இந்த சம்பவம் அறிந்த திருமுருகன் சற்று பதறினார். இதையடுத்து அந்த சிறுமியை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று அவர் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார்.
 
இதன் பின்னர் தன் வீட்டிற்கு வந்த போது நடந்த அனைத்தையும்  அந்த சிறுமி தன் பெற்றோரிடம் தெரிவித்தார். 
 
இதைக்கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர் .பின்னர் மகளை  அழைத்து கொண்டு சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.
 
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார்  அதிமுக பிரமுகர்  திருமுருகனை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். . இந்த சம்பவம தமிழ்நாட்டில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

நள்ளிரவில் தேர்தல் ஆணையர் நியமனமா? ராகுல் காந்தி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்