கூட்டணி குறித்த திமுகவின் விமர்சனத்தை காங்கிரஸ் கட்சியினர் எப்படித்தான் தாங்கி கொள்கிறார்களோ என காங்கிரஸாரை சீண்டும் வகையில் பேசியுள்ளார் அமைச்சர் ஜெயகுமார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் தமிழக அரசின் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு...
திருவள்ளுவர் சாதி, மதம், இனம், மொழி கடந்தவர். சாதி வெறி, மத வெறி, இன வெறி, மொழி வெறி பிடித்தவர்கள் திருக்குறளை படித்தால் அவர்களின் வெறித்தனம் போய்விடும் என்றும் கூறினார். இதன் பின்னர் காங்கிரஸ் - திமுக இடையேயான மனகசப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்கு பின்வருமாறு பதில் அளித்தார்...
கூட்டணி குறித்த திமுகவின் விமர்சனத்தை காங்கிரஸ் கட்சியினர் எப்படித்தான் தாங்கி கொள்கிறார்களோ. இனி தாங்கள் தன்மானமிக்கவர்களா என்பதை காங்கிரஸார்தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.