Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க சீட்டு தரலைன்னா சுயேட்சையா நிற்போம்; அதிமுகவில் பூசல்! – 8 பேர் கட்சியிலிருந்து நீக்கம்!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (09:23 IST)
தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உட்கட்சி பூசலால் அதிமுகவிலிருந்து 8 பேர் நீக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்திருந்தது. இதில் அதிமுகவினருக்கே சிலருக்கு உடன்பாடு இல்லாததால் உட்கட்சி பூசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிமுகவை சேர்ந்த சிலரே அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் ஈபிஎஸ், ஓபிஎஸ் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் “அதிமுக கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாலும், அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிடுவதாலும் கட்சியை சேர்ந்த டி. பாபு, எஸ். பாஸ்கரன், சையத்கான், கே. வெங்கடேசன், பாண்டியன், கஜேந்திரன், எல். வெங்கடேசன், அசோக் குமார் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள்” என அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments