Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அசைக்க முடியாதா சக்தி - மம்தாவிற்கு ஸ்டாலின் வாழ்த்து

அசைக்க முடியாதா சக்தி - மம்தாவிற்கு ஸ்டாலின் வாழ்த்து
, ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (15:53 IST)
பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.  
 
கடந்த மே மாதம் நடந்த மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார் என்பதும் அவரது கட்சி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து சமீபத்தில் நடைபெற்ற பவானிபுர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளர் பிரியங்கா டிப்ரேவால் என்பவர் போட்டியிட்டார். 
 
இன்றைய இடைத் தேர்தல் முடிவைப் பொறுத்து தான் மம்தாவின் அரசியல் எதிர்காலம் உள்ளது என்பதும் இன்று அவர் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வராக நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  பவானிபூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பிரியங்கா டிப்ரேவாலை விட 52,832 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றிப் பெற்றுள்ளார் முதல்வர் மம்தா பானர்ஜி.
 
மேலும் இதில் வென்றால் மட்டுமே முதல்வர் பதவியில் மம்தா பானர்ஜி நீடிக்க முடியும் என்ற நிலையில் இப்போது வெற்றியை உறுதி செய்துள்ளதால் அவர் அம்மாநில முதல்வராக தொடர்கிறார். இதனிடைடே மம்தாவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
மேற்கு வங்க மக்கள் மம்தா பானர்ஜி மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை அவரது வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது என கூறி பவானிப்பூ இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தனது வாழ்த்தை பகிர்ந்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மது குடித்த சிறுவன் மரணம்: அதிர்ச்சியில் தாத்தாவும் மரணம்!