Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளை வெச்சே விவசாயிகளை அடிப்போம்!? – முதல்வர் பேச்சால் சர்ச்சை!

Hariyana
Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (09:10 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளை பழி வாங்க வேண்டுமென அரியானா முதல்வர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்து வரும் நிலையில் அரியானாவிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அரியானாவில் நடந்த பாஜக விவசாய பிரிவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் “அரியானாவின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கலில் 700 முதல் 1000 பேர் கொண்ட விவசாயிகள் தன்னார்வல அமைப்பை உருவாக்க வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களை பழிக்கு பழி வாங்க கட்டையை கையில் எடுக்க வேண்டும்” என பேசியுள்ளார்.

முதல்வராய் இருந்து விவசாயிகளிடையே வன்முறையை தூண்டும் விதமாகமுதல்வர் மனோகர் லால் கட்டார் பேசியுள்ளதாக எதிர்கட்சிகள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments