விஜய்யை அதிமுகவினர் விமர்சிக்க வேண்டாம்: நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுறுத்தினாரா?

Siva
ஞாயிறு, 3 நவம்பர் 2024 (08:45 IST)
நடிகர்  விஜய்யையும் அவரது கட்சியையும்  அதிமுகவினர்    விமர்சனம் செய்ய வேண்டாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக மாநாடு கடந்த வாரம் நடந்த நிலையில், அந்த மாநாட்டில் அவர் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை நேரடியாகவே விமர்சனம் செய்தார். அவர் விமர்சனம் செய்யாத ஒரே பெரிய கட்சி அதிமுக என்பதும், அதிமுகவின் எம்ஜிஆர் கொள்கைகளை அவர் போற்றி புகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டிற்கு பின்னர், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், பாஜக, மற்றும் நாம் தமிழர் கட்சியும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், அதிமுகவிலிருந்து பெரிய அளவில் விமர்சனம் எழவில்லை. இந்த நிலையில், விஜயை அதிமுகவினர் விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன. அதிமுகவின் தலைவர் எம்ஜிஆரை புகழ்ந்து உள்ளார் என்றும், நம்மைப் பற்றி அவர்கள் விமர்சனம் செய்யாத நிலையில் நாமும் அவரை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, அதிமுகவுடன் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணியாக இணைய வாய்ப்பு இருப்பதாகவும், இந்த கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments