கடந்த சில நாட்களாக, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யை சீமான் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், சீமானுக்கு பதிலடி கொடுக்க நாளை தவெக கட்சியின் அவசர ஆலோசனை நடைபெற இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாநாட்டில், விஜய்யின் பேச்சு குறித்து சீமான் கிண்டலுடன் விமர்சித்து வருகிறார். இதற்கு பதிலாக, சமூக வலைதளங்களில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும் சீமானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், விஜய் தலைமையில் நாளை தமிழக வெற்றி கழக நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாகவும், இந்த கூட்டத்தில் சீமான் மீது பதிலடி கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தவெக மாநாட்டுக்கு முன் விஜய்யை தனது தம்பி என அன்பாக அழைத்து வந்த சீமான், மாநாட்டிற்கு பிறகு கடுமையாக விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக வெற்றி கழகத்தின் தரப்பிலிருந்து என்ன பதிலடி கொடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.