Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணமான 2 -ம் நாள் 8 பவுன் நகையுடன் ஓடிய இளம்பெண்

Advertiesment
திருமணமான 2 -ம் நாள் 8 பவுன் நகையுடன் ஓடிய இளம்பெண்
, சனி, 11 பிப்ரவரி 2023 (20:08 IST)
விழுப்புரம் மாவட்டத்தில் முகநூல் மூலம் பழகிய பெண்ணை மணிகண்டன் என்பவர் திருமணம் செய்த நிலையில், அப்பெண் பணம், நகையுடன் ஓடிப்போன சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் அருகிலுள்ள சிறுதலைப்பூண்டி என்ற பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன்.

இவர், அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இவர் சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் மகாலட்சுமி என்ற பெண்ணுடன் பழகினார்.

இவர்களின் நட்பு காதலாக மாறிய நிலையில், தான் ஒரு அனாதை என்றும், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி மணிகண்டனிம், மகாலட்சுமி  கூறியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த நவம்பர் 18 ஆம் தேதி அவலூர்பேட்டை அருகிலுள்ள அங்காளம்பர் கோயிலில் மணிகண்டனின் பெற்றோர் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடந்தது.
மகாலட்சுமிக்கு மணிகண்டன் வீட்டார் சார்பில் 8 பவுன் நகை போட்டுள்ளனர். 

அதன்பின்னர், 11 ஆம் ததி காலையில் மணிகண்டன் மற்றும் அவரது பெற்றோர் வேலைக்குச் சென்ற  நிலையில், மகாலட்சுமி 8 பவுன்  நகைகளுடன் அவர் வீட்டை வீட்டு ஓடிச் சென்றார்.

இதுகுறித்து, மணிகண்டன் வீட்டார் போலீஸார் புகாரளித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாக்குதல் நடத்திய நபர் மீது சூடான காஃப்பியை ஊற்றிய பெண் எம்பி,