தமிழ் சினிமாவில் 80 களில் இருந்து 90 களின் தொடக்கம் வரை கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. எப்படி ரஜினி கமல், கவுண்டமணி & செந்தில் மற்றும் இளையராஜா ஆகியோர் படத்தின் வியாபாரத்தை தீர்மானித்தார்களோ அதுபோல சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி நடனமும் படத்தின் வியாபாரத்தை நிர்ணயித்தது. கவர்ச்சி நடிகையாக மட்டுமில்லாமல் அலைகள் ஓய்வதில்லை மற்றும் சூரக்கோட்டை சிஙகக்குட்டி ஆகிய படங்களில் மாறுபட்ட வேடங்களிலும் நடித்துள்ளார் சில்க்.
இந்நிலையில் 1995 ஆம் ஆண்டு தன்னுடைய தற்கொலை செய்துகொண்ட சில்க் ஸ்மிதாவின் மரணத்துக்குப் பின்னான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் அவரின் வாழ்க்கையை ஒட்டி ஏற்கனவே தி டர்ட்டி பிக்சர் என்ற படம் இந்தியில் உருவாக்கப்பட்டது. இப்போது தமிழிலும் சில்க் ஸ்மிதாவின் பயோபிக் உருவாக உள்ளது.
இந்நிலையில் இன்று சில்க் ஸ்மிதாவின் 62 ஆவது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பலரும் சில்க்கின் புகைப்படங்களைப் பகிர்ந்து நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.