Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எம்.எல்.ஏ விற்கு 16 வயது பள்ளி மாணவி அனுப்பிய போட்டோவால் பரபரப்பு!!!

Advertiesment
எம்.எல்.ஏ விற்கு 16 வயது பள்ளி மாணவி அனுப்பிய போட்டோவால் பரபரப்பு!!!
, செவ்வாய், 11 டிசம்பர் 2018 (09:55 IST)
புதுக்கோட்டையில் 16 வயது பள்ளி மாணவி ஒருவர் தங்கள் தெருவில் மின்சாரம் இல்லாததை ஒரு கடிதமாக எழுதி அதனை போட்டோ எடுத்து எம்.எல்.ஏவிற்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. பல இடங்களில் இன்னும் மின்சாரம் வந்த பாடில்லை.
 
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்னும் மின்சாரம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
 
இதற்கிடையே பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நெருங்கிவிட்டதால், எப்படி வீட்டில் படிப்பது என்று அச்சம் கொண்டிருக்கிறார்கள். அபிநிஷா என்ற 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒரு கடிதத்தில், தங்கள் பகுதியில் ஒரு மாதகாலமாக மின்சாரம் இல்லாததால் படிப்பதற்கு மிகவும் சிரமாக இருக்கிறது. தேர்வு ஆரம்பித்துவிட்டது.
webdunia

ஆகவே நாங்கள் படிப்பதற்கு விரைவில் மின்சாரம் அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என ஒரு கடிதத்தை எழுதி அதில் சக மாணவ மாணவிகளின் கையெழுத்தை வாங்கி அதனை அந்த பகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளார்.
 
இதனைப் பார்த்த எம்.எல்.ஏ உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையில் வேலை வாய்ப்புகள் – லிங்க் உள்ளே