Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனாட்சி அம்மன் கோவில் அருகே பாதாளச்சிறையா? ஒரு ஆச்சரிய தகவல்

Webdunia
ஞாயிறு, 14 ஜூலை 2019 (15:30 IST)
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குறித்து இன்னும் பலர் அரியாத அரிய தகவல்கள் புதைந்து கிடப்பதாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே கூறியுள்ள நிலையில் தற்போது மீனாட்சி அம்மன் கோவில் அருகே பள்ளம் தோண்டியபோது பாதாளச்சிறை போன்ற ஒரு கட்டிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
 
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே கார் பார்க்கிங் பணிக்கான கட்டிட வேலை ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடத்தின் அடித்தளத்திற்காக சுமார் 30 அடி அளவில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது பள்ளத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையுடன் கூடிய ஒரு பழமையான கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த இடத்தில்தான் ராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் பாதாளச்சிறைச்சாலை ஒன்று இருந்ததாகவும், அந்த சிறைச்சாலைதான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கட்டிடம் என்றும் கூறப்படுகிறது. 
 
எனவே இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பழமையான கட்டிடம் பாதாளச்சிறை என உறுதி செய்யப்பட்டால் அதனை தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என மதுரை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை மாநகரில் இன்னும் பல புதிர்கள் இருப்பதாகவும் அதனை தொல்லியல்துறையினர் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டுமென்றும் வரலாற்று ஆய்வாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments