Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விவசாய கிணற்றில் 70 வயது மதிக்கதக்க மூதாட்டியின் சடலம்- போலீஸார் விசாரணை

Advertiesment
70year old grandfather
, செவ்வாய், 9 ஜூலை 2019 (21:48 IST)
கரூர் மதுரை தேசியநெடுஞ்சாலை பகுதியில் உள்ளது சுக்காலீயூர் கிராமம் இப்பகுதியில் விவசாயம் நிறைந்த பகுதியாகும் அப்பகுதியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றிலிருந்து நீர் வெளியேற்றுவதற்காக வந்த போது கிணற்றில் 70 வயது மதிக்கதக்க மூதாட்டியி் சடலம் மிதந்து கொண்டிருந்ததை கண்டி அதிர்ச்சியடைந்தார். 
உடனே பசுபதிபாளையம் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் செந்தில் பார்வையிட்ட பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்டு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில் வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்த சடலத்தை மீட்டனர். இது குறித்து அப்பகுதி மக்களிடம் போலீஸார் விசாரனை செய்ததில் இறந்த மூதாட்டியின் பெயர் பேச்சியம்மாள் என்பது அவர் அதே பகுதியில் வசித்து வந்தார் என்பது தெரியவந்தது. 
 
பிரேதத்தை கரூர் அரசு மருத்தவக்கல்லுாரி மருத்தவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பசுபதிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையா தற்கொலையா என்று விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரிட்டன் பிரதமரை கடுமையாக விமர்சித்த டிரம்ப் - கசிந்த இமெயிலில் இருந்த செய்தி என்ன?