Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 தொகுதிகள் இடைத்தேர்தல்: கமல், ரஜினிக்கு ஒரு நல்ல வாய்ப்பு

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (20:56 IST)
புதியதாக ஆரம்பிக்கும் ஒரு கட்சி மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடாமல் ஒரு சில குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிட்டு தங்களுக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவை கணக்கிடுவது வழக்கம். அந்த ஒரு வாய்ப்பு கமல், ரஜினி ஆகிய இருவருக்கும் தற்போது தானாக அமைந்துள்ளது.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்ற தீர்ப்பால் தமிழகத்தில் 18 தொகுதிகளும், மு.கருணாநிதி மற்றும் ஏ.கே.போஸ் மறைவால் 2 தொகுதிகளும் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் கமல், ரஜினி கட்சிகள் போட்டியிட்டு மக்கள் தங்களை அங்கீகரிக்கின்றார்களா? என்பதை வெள்ளோட்டம் பார்த்து கொள்ளலாம். இந்த 20 தொகுதிகளில் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றாலே மிக எளிதில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருவருக்கும் ஏற்பட ஒரு வாய்ப்பு உள்ளது.

அதேபோல் மக்கள் ஆதரவு இல்லாமல் திணறி கொண்டிருக்கும் தேமுதிக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இந்த இடைத்தேர்தலில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் 2021ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலுக்கும், 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கும் தயாராகலாம் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments