Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோபியா விவகாரம்: தமிழிசை மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (20:45 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து தூத்துகுடி சென்ற விமானத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் முன்பே 'பாஸிச பாஜக ஒழிக' என்று கோஷம் போட்ட ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது தெரிந்ததே.

இந்த விவகாரத்தில் தமிழிசை தன்னையும் தனது குடும்பத்தினர்களையும் மிரட்டியதாக சோபியாவின் தந்தை கொடுத்த புகாரின்மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்றத்தில் இதுகுறித்து சோபியா தந்தை வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு இன்று தூத்துக்குடி நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் இறுதியில் 'மாணவி சோபியாவை மிரட்டிய புகாரில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்  மாணவியின் தந்தை தொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை அறிக்கையை நவம்பர் 20ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் தூத்துகுடி காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெல்லை நீதிமன்றம் முன் நடந்த இளைஞர் கொலை.. 5 பேர் கைது..!

இறங்கிய வேகத்தில் ஏறும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 480 ரூபாய் உயர்வு..!

கேரள கழிவு விவகாரம் எதிரொலி; குப்பை கொட்டுபவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு!

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் வழக்கு..!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை எதிரொலி: பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments