Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்திக் சிதம்பரத்தின் தேவையில்லாத வேலை!

கார்த்திக் சிதம்பரத்தின் தேவையில்லாத வேலை!
, ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (14:54 IST)
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகிய இருவரும் இரண்டு நாள் பயணமாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே 
 
இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கூட பாராட்டி வருகின்றனர். இந்தியாவின் பெருமை குறிப்பாக மாமல்லபுரத்தின் பெருமை சீன அதிபரின் வருகையால் இன்று உலகிற்கே தெரிந்துள்ளது. 
 
இந்த நிலையில் பிரதமர் மோடி கோவளம் கடற்கரையில் குப்பைகளை அள்ளிய வீடியோ நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ குறித்து சில சர்ச்சைக்குரிய கேள்விகளை நடிகர் பிரகாஷ்ராஜ் உள்பட ஒரு சில பேர் எழுப்பி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகனும் சிவகங்கை தொகுதி எம்பியுமான கார்த்திக் சிதம்பரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் பிரதமர் மோடி குப்பைகளை அள்ளும் போது புகைப்படம் எடுக்கும் குழுவினர் குறித்த ஒரு புகைப்படம் இருந்தது. ஒருவர் குப்பை அள்ளியதை பலர் வீடியோ எடுப்பதாக கிண்டலுடன் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த புகைப்படம் போலியானது என்றும் அது ஒரு வெளிநாட்டுக் குழுவினர் கடற்கரையை புகைப்படம் எடுக்க எடுத்த ஒரு பழைய புகைப்படம் என்றும் தெரியவந்தது. இதனை அடுத்து பாஜகவினர் மற்றும் நெட்டிசன்கள் கார்த்தி சிதம்பரத்தை வறுத்தெடுத்து வருகின்றனர். கார்த்தி சிதம்பரத்திற்கு ஏன் இந்த தேவை வேலை? என்று நெட்டிசன்கள் தற்போது அவரை கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காட்டு காட்டிய ஹகிபிஸ் புயல்: 11 பேர் பலி, 99 பேர் காயம்!