Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாக்கிங் போன போது கையில் வைத்திருந்தது என்ன? மோடி உடைத்த சீக்ரெட்!

வாக்கிங் போன போது கையில் வைத்திருந்தது என்ன? மோடி உடைத்த சீக்ரெட்!
, ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (11:43 IST)
பிரதமர் நரேந்திர மோடி, நேற்று காலை கடற்கரையில் வாக்கின் சென்ற போது கையில் வைத்திருந்தது என்னவென தகவல் வெளியிட்டுள்ளார். 

 
இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த சந்திபிற்காக கோவலத்தில் தங்கியிருந்த மோடி நேற்று அதிகாலை கடற்கரையில் கால்களில் செருப்பு அணியாமல் நடைபயிற்சி மேற்கொண்டார். 
 
அப்போது கடற்கரை மணலில் இருந்த குப்பைகளை அள்ளி தூய்மை பணியில் ஈடுப்பட்டார். மோடி வாக்கிங் சென்ற போதும், தூய்மை பணியில் ஈடுபட்ட போதும் கையில் ஒரு பொருளை வைத்திருந்தார். அந்த பொருள் என்னவென பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
 
webdunia
இதற்கு தற்போது பதில் அளித்துள்ளார் மோடி. இது குறித்து மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, நேற்றிலிருந்து பலரும் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டு வருகின்றனர். அது நான் நடைபெயிற்சியின் போது கையில் வைத்திருந்தது என்ன என்பதுதான். அந்த கருவியின் பெயர் அக்குபிரஷர் ரோலர். இது என்னக்கு எப்போதும் உபயோகமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்!? – சீமானின் சர்ச்சை பேச்சு