Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தை சடலத்தை குப்பையில் வீசிய மருத்துவமனை ஊழியர்கள்; நாய் இழுத்துச் சென்ற அவலம்

குழந்தை சடலத்தை குப்பையில் வீசிய மருத்துவமனை ஊழியர்கள்; நாய் இழுத்துச் சென்ற அவலம்
, வெள்ளி, 22 மார்ச் 2019 (15:17 IST)
ஒசூர் மருத்துவமனையில் குழந்தையின் சடலத்தை மருத்துவமனை ஊழியர்கள் குப்பையில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கர்னுர் பகுதியை சேர்ந்தவர் நாகம்மா. இவர் கர்ப்பமான இருந்த நிலையில் நேற்று காலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் குழந்தையின் எடை மிகக்குறைவக இருந்ததால் அவர்கள் குழந்தையை ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கூறினர். அதன்படி குழந்தை ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
 
ஆனால் குழந்தை நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தது. நடுராத்திரி என்பதால் செய்வதறியாது திகைத்த குழந்தையின் பெற்றோர், குழந்தையின் சடலத்தை ஒரு கவரில் போட்டு அதனை வைத்திருந்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவர்கள், குழந்தை சடலத்தை கையில் வைத்துக்கொண்டு இங்கே உட்காராதீர்கள், வெளியே போங்கள் என கூறியுள்ளனர்.
 
இதனால் அவர்கள் குழந்தையின் சடலத்தை பாத்ரூமில் வைத்துள்ளனர். பின்னர் காலையில் எழுந்து பார்க்கும்போது குழந்தை பாத்ரூமில் இல்லை. இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது, குழந்தையை குப்பை தொட்டியில் வீசிவிட்டதாக கூறினர்.
 
குப்பை தொட்டி அருகே சென்று பார்த்தபோது, குழந்தை நாய்கடி பட்டு உடம்பில் ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. உடனடியாக குழந்தை மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் இந்த ஜந்துக்கள் செய்த அரக்க செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேமரா வேர லெவல்.. ரேட்டு ஹை லெவல்: நோக்கியா 9 பியூர் வியூ!!