Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தைகள் முன் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன...?

குழந்தைகள் முன் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன...?
குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம்.
கணவன் மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக  தவிர்க்க வேண்டும்.
 
*குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை  நினைவில் கொள்ளுங்கள்.
 
சிறு குழந்தைகளை மிரட்டும் போது, “கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்’ போன்ற வார்த்தைகளை  உபயோகிக்காதீர்கள்.
 
சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்பும் தாய்மார்கள், குழந்தைகளிடம், “அப்பாகிட்டே சொல்லிடாதே” என்று  கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே  “அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்’ என்று மிரட்டும்.
 
குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. “உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும்  தெரியலே’ போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும்  மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.
 
குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன் என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால்,  நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.
 
உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை  வளரும்.
 
படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, “பாசிடிவ் அப்ரோச்’ இருக்க வேண்டும். “நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்’ என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சருமம் மற்றும் முடியை பராமரிக்க உதவும் ஆலிவ் ஆயில்....!