Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எலிக்கு வைத்த கேக்கை சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

Advertiesment
எலிக்கு வைத்த கேக்கை சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு
, செவ்வாய், 3 ஜூலை 2018 (11:45 IST)
தூத்துக்குடியில் எலியைக் கொல்ல வைத்த விஷ கேக்கை சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தலையால் நடந்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வம். இவர் வீட்டில் எலித்தொல்லை அதிகாமாக இருந்ததனால், எலியைக் கொல்ல திட்டமிட்ட அவர் எலிமருந்து வி‌ஷம் தடவிய கேக்கைவாங்கி வீட்டில் எலி நடமாடும் பகுதிகளில் வைத்துள்ளார். இதில் நிறைய எலிகள் செத்தனர்.
 
இந்நிலையில் நேற்றும் தெய்வம் இதேபோல் எலிமருந்து வி‌ஷம் தடவிய கேக்கை வீட்டில் வைத்துள்ளார். கேக்கைப் பார்த்த தெய்வத்தின் மகன் முத்து(8), அதை சாப்பிடும் பொருள் என நினைத்து அந்த விஷம் தடவிய கேக்கை எடுத்தி சாப்பிட்டுள்ளான்.
webdunia
சிறிது நேரத்தில் சிறுவன் மயக்கமடைந்தான். அதிர்ந்து போன சிறுவனின் தந்தை, அவனை மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

9வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த இளம்பெண் - காரணம் இதுதான்