Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

16 வயது சிறுமியை கற்பழித்துவிட்டு ஜாதி கீதின்னு கதைவிடும் அயோக்கியன்

16 வயது சிறுமியை கற்பழித்துவிட்டு ஜாதி கீதின்னு கதைவிடும் அயோக்கியன்
, புதன், 2 ஜனவரி 2019 (13:15 IST)
16 வயது சிறுமியை கற்பழித்துவிட்டு அவரை ஜாதி பெயரை கூறி ஒதுக்க நினைக்கும் வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்தவர் உஷாராணி. இவரது 16 வயது மகள் கல்லூரியில் படித்து வருகிறார். அங்கு இவருக்கும் ராகுல்(19) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறி, தனிமையில் எல்லை மீறினர். 
 
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சிறுமிக்கு வயிற்று வலி அதிகரிக்கவே, அவர் தனது தாயுடன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் சிறுமிக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பிறந்துவிட்டது. இதனால் அதிர்ந்துபோன சிறுமியின் தாயார் இதுகுறித்து சிறுமியிடம் விசாரிக்க அவர் நடந்தவற்றை கூறினார்.
 
இதனையடுத்து மாணவியின் தாயார் அளித்த புகாரின்பேரில், போலீஸார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் இதற்கும் தமக்கும் சம்மந்தமில்லை என பொய் கூறினான். அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும் என போலீஸார் கூற, ராகுல் அந்த பெண் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவள் என்றும் அவளை திருமணம் செய்துகொண்டால் வீட்டில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள எனவும் தான் சிறைக்கே செல்கிறேன் எனவும் சொல்லியிருக்கிறான்.
 
பேசும்போது தெரியவில்லை, பழகும்போது தெரியவில்லை, எல்லை மீறும்போது தெரியாத சாதி இப்பொழுது மட்டும் எங்கேன்னு முளைத்தது என தெரியவில்லை. இவனை மாதிரியான ஆட்களை நடுரோட்டில் நிக்க வைத்து சுட்டுத்தள்ள வேண்டும் என பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

303 வாக்குச்சாவடி,புகார் எண்(18004257035 ) - இடைத்தேர்தல் வேலைகள் ஆரம்பம்..