Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

303 வாக்குச்சாவடி,புகார் எண்(18004257035 ) - இடைத்தேர்தல் வேலைகள் ஆரம்பம்..

303 வாக்குச்சாவடி,புகார் எண்(18004257035 ) - இடைத்தேர்தல் வேலைகள் ஆரம்பம்..
, புதன், 2 ஜனவரி 2019 (13:03 IST)
திருவாரூரில் தேர்தல் ஏற்பாடுகளைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் வாக்குச்சாவடி விவரங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

திமுக தலைவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்ததை அடுத்து அவரின் தொகுதியான திருவாரூர்  5 மாத காலமாக காலியாக உள்ளது.அதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூரில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து இந்த தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் அமமுக ஆகிய பெரியக் கட்சிகள் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. தேமுதிக, பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மற்ற கட்சிகள் இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட வில்லை. தேர்தலுக்கு இன்னும் 26 நாட்கள் உள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் இன்று ஆரம்பித்துள்ளது.
webdunia

தேர்தல் பணிகளை ஆரம்பித்து வைத்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ், திருவாரூரில் மொத்தம் 303 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும். தேர்தல் சம்மந்தமாக ஏதேனும் புகார்கள் தெரிவிக்க வேண்டுமென்றால் 18004257035 என்ற இலவச எண்ணுக்கு அழைத்துக் கூறலாம் என்றும் அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமமுக வேட்பாளர் ஜனவரி 4 –ல் அறிவிக்கப்படுவார் – டிடிவி அதிரடி