Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (11:12 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி முகாம்கள் அவ்வப்போது தமிழக அரசு நடத்தி வருகிறது என்பதும் சமீபத்தில் கூட எட்டாம் கட்ட தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது என்பதும் இதில் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசிகளை செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது ஒன்பதாம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில் ’தமிழ்நாடு முழுவதும் வரும் நவம்பர் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒன்பதாம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்றும் இதில் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
 
இதுவரை முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தாதவர்கள் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டியவர்கள் இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படும் வதாகவும் அவர் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments