Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா 3வது அலையில் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் என்ன?

கொரோனா 3வது அலையில் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் என்ன?
, சனி, 13 நவம்பர் 2021 (13:27 IST)
பல்வேறு பகுதிகளில் தென்படும் 3வது அலையில் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் பெரிதும் மாறுபட்டுள்ளன என தகவல். 

 
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.  
 
இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா 3வது அலை வருவதற்கு வாய்ப்புள்ளது என ஐஎம்ஏ தேசிய தலைவர் தெரிவித்துள்ளார். 
 
இதனிடையே பல்வேறு பகுதிகளில் தென்படும் 3வது அலையில் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் பெரிதும் மாறுபட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுவாக கணிக்கப்பட்ட 3வது அலையில் அறிகுறிகள் பின்வருமாறு... 
 
1. 7 முதல் 8 நாட்களுக்கு பிறகே சுவை, வாசனை இழப்பு.
2. சளியுடன் கூடிய இருமல்,  மிக குறைந்த வெப்பநிலையில் காய்ச்சல்.
3. குறைவான உடல் சோர்வு, ஒரு சதவீதத்துக்கும் குறைவான நோயாளிகளுக்கு மட்டுமே சுவாச கோளாறு 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது