Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறிநாய் கடித்ததில் சிறுவன் பலி – சங்கரன்கோவிலில் நடந்த சோகம் !

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (10:07 IST)
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் வெறிநாய் ஒன்று கடித்ததில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிக்கு அருகே ரெங்கசமுத்திரம் எனும் கிராமம் உள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சேதுபதியின் (38) மகன் சந்தோஷ் (8). இவன் அதேப் பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கிறான்.

நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடித்து வீட்டுக்கு வந்த சந்தோஷ் வழக்கம்போல விளையாட வெளியே சென்றுள்ளான். ஆனால் வெகுநேரமாகியும் அவன் வீடு திரும்பாததால் ஊர்முழுக்க அவனைத் தேடியுள்ளனர். அப்போது அந்தோனிராஜ் என்பவரின் தோட்டத்தின் அருகே சந்தோஷ் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தான்.  வெறிநாய்கள் கடித்து சிறுவன் தெரியவந்துள்ளது. மேலும் அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரையும் வெறிநாய்கள் கடித்துள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை உண்டாக்கியுள்ளது. ஊருக்குள் சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments