Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் 23ம் தேதி முதல் 55 மின்சார ரெயில்கள் ரத்து. முழு விவரங்கள்..!

Advertiesment
சென்னையில் 23ம் தேதி முதல் 55 மின்சார ரெயில்கள் ரத்து. முழு விவரங்கள்..!

Siva

, புதன், 17 ஜூலை 2024 (22:22 IST)
சென்னையில் 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 14ம் தேதி வரை 55 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்கள் இதோ: 
 
* சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.40, 9.48,10.04, 10.12, 10.24, 10.30, 10.36, 10.46, 11.06, 11.14, 11.22, 11.30, 11.50, மதியம் 12, 12.10, 12.30, 12.50 இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு14-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 
* சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.56, 10.56, 11.40, மதியம் 12.20, 12.40, இரவு 10.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 14-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 
* சென்னை கடற்கரையிலிருந்து இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கூடுவாஞ்சேரி செல்லும் மின்சார ரெயில்கள் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 14-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 
* தாம்பரத்தில் இருந்து காலை 10.30, 10.40, 11, 11.10, 11.30, 11.40, மதியம் 12.05, 12.35, 1, 1.30, இரவு 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 14-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 
*செங்கல்பட்டிலிருந்து காலை 11, 11.30 மதியம் 12, இரவு 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 14-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 
*கூடுவாஞ்சேரியிலிருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 14-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 
*செங்கல்பட்டிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் வரும் 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 14-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 
காஞ்சீபுரத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 14-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 
திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 14-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
 
* சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.30, 9.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, மதியம் 12.10, 12.30, 12.50, இரவு 10.40, 11.05, 11.30, 11.59, ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரெயில் பல்லாவரம் வரை இயக்கப்படுகிறது.
 
* மறுமார்க்கமாக, பல்லாவரத்தில் இருந்து காலை 10.20, 10.40, 11, 11.20, 11.40, மதியம் 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40, இரவு 11.30, 11.55, 12.20, 12.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு வரும் சிறப்பு மின்சார ரெயில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படுகிறது.
 
*கூடுவாஞ்சேரியிலிருந்து காலை 10.45, 11.10, மதியம் 12, 12.50, 1.35, 1.55, இரவு 11.55 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடும் எதிர்ப்பு எதிரொலி: கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறுத்தம்