Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்டுக்கோட்டை அருகே ஆட்டோ மீது வேன் மோதி 3 பேர் சாவு

Advertiesment
பட்டுக்கோட்டை அருகே ஆட்டோ மீது வேன் மோதி 3 பேர் சாவு
, செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (15:06 IST)
புதுக்கோட்டை மாவட்டம் காசிம் புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் நகுருன்னிசா (37), மற்றும் பாத்திமா பீவி வயது 60 இருவரும் மருத்துவ சிகிச்சைக்காக ஆவணம் கைகாட்டியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவருடைய ஆட்டோவில் பட்டுக்கோட்டைக்கு சென்றனர்.



அப்போது புனல் வாசல் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் இறந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த நகுரின்னிசா பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
 
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவின் வழியில் நானும் பாஜக எதிர்ப்பு அரசியலை தொடர்கிறேன்’’ - தனியரசு