Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகளிடம் பேசிய இளைஞர்! தட்டி கேட்ட தந்தை அடித்து கொலை

Advertiesment
மகளிடம் பேசிய இளைஞர்! தட்டி கேட்ட தந்தை அடித்து கொலை
, வியாழன், 31 ஜனவரி 2019 (15:38 IST)
மகளை வழிமறித்து பேசிக் கொண்டிருந்த இளைஞரை தட்டிக் கேட்ட தந்தை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அறந்தாங்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே  ரத்தினக்கோட்டையைச் சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது 52). இவரது மகள் அறந்தாங்கியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அவர்  வழக்கம்போல வேலைக்கு சென்றபோது, அப்பகுதியில் உள்ள தைலமரக்காடு அருகே அதே ஊரைச் சேர்ந்த செல்வம்(வயது 25) என்பவர் வழிமறித்து பேசிக்கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மகாலிங்கம் அப்பகுதிக்கு விரைந்து சென்று செல்வத்திடம், எதற்காக தனது மகளை வழிமறித்து பேசிக்கொண்டிருக்கிறாய் எனக் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் செல்வம் மகாலிங்கத்தை தாக்கியுள்ளார்.  இதில் மகாலிங்கம் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.  அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 
 
இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதல் விவகாரம்! கோவையில் கல்லூரி மாணவன் குத்திக் கொலை! சக மாணவன் கைது