Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளம்பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்திய வாலிபர்கள் - மறுத்ததால் கொலை முயற்சி

Advertiesment
இளம்பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்திய வாலிபர்கள் - மறுத்ததால் கொலை முயற்சி
, திங்கள், 21 நவம்பர் 2016 (15:41 IST)
ஆசைக்கு இணங்க மறுத்ததால் இளம்பெண்ணை கொல்ல முயற்சித்த இரண்டு வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


 

தூத்துக்குடி முத்தையாபுரத்தை அடுத்த ஸ்பிக் நகர் அருகே உள்ள கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. கூலி தொழிலாளி. சுடலைக்கண்ணு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், இவரது மனைவி தங்கலட்சுமி (25) வேலைக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த தங்கமுருகன் (28), சாமிநகரை சேர்ந்த ஆனந்த் (28) ஆகிய இருவரும், தங்கலட்சுமியை எப்படியும் அடைந்தே தீர வேண்டும் என்று நீண்ட நாட்களாக திட்டமிட்டுள்ளனர். மேலும், தொடர்ந்து தங்கலட்சுமிக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.

இதற்கான சந்தர்பத்தை பார்த்துக் கொண்டிருந்த தங்கமுருகன் மற்றும் ஆனந்த் இருவரும் சம்பவத்தன்று, தங்கலட்சுமியை வலுக்கட்டயமாக ஆசைக்கு இணங்குமாறு தொந்தரவு செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள கத்திக் கூச்சலிட்டுள்ளார்.

அவர் கூச்சலிட்டதும் தங்கமுருகனும், ஆனந்தும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பி சென்ற தங்கலெட்சுமி இது குறித்து முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை ஆய்வாளர் சுந்தர்ராஜ் தங்கமுருகன், ஆனந்த் இருவரையும் கைது செய்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘சொல்வதெல்லாம் உண்மை’ கிண்டல் - ஜி.வி பிரகாஷிடம் மோதிய லட்சுமி ராமகிருஷ்ணன்