Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘சொல்வதெல்லாம் உண்மை’ கிண்டல் - ஜி.வி பிரகாஷிடம் மோதிய லட்சுமி ராமகிருஷ்ணன்

Advertiesment
Lakshmi ramakrishnan
, திங்கள், 21 நவம்பர் 2016 (15:38 IST)
கடவுள் இருக்கான் குமாரு படத்தில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை கிண்டல் செய்வது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அந்த காட்சியில் ஜி.வி.பிரகாஷ், ஆர்.ஜே. பாலாஜி, ஊர்வசி ஆகியோர் நடித்திருந்தனர். 


 

 
இதனால் கோபம் அடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பாலாஜியை கடுமையாக திட்டினார். 
 
என்னுடைய நிகழ்ச்சியை நீங்கள் கிண்டல் செய்வதற்கு முன்னால் உங்களுடைய படங்களை நீங்கள் விமர்சனம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். என்னுடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அம்மணி படம் பெரிய அளவுக்கு வெற்றிபெறாவிட்டாலும், எனக்கென்று ஒரு தனி மரியாதையை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.  
 
சென்னை வெள்ளத்தின்போது விளம்பரத்துக்காகத்தான் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக காட்டிக் கொண்டார் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருமா? இல்லையா? ஆனால் நான் அப்படி சொல்லும் ஆள் கிடையாது. நான் மற்றவர்களை மதிக்கக்கூடியவள், என்று பதிவிட்டார். 
 
ஆனால், இதற்கு பாலாஜி எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.எனவே, லட்சுமி ராமகிருஷ்ணன் தனது கோபத்தை ஜி.வி.பிரகாஷ் மீதி திருப்பினார். 
 
தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “என்னுடைய அடுத்த படத்தில் உங்களுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுக்கிறேன். அதில் நடியுங்கள். உங்கள் ரசிகர்களுக்கு கொஞ்சமாவது நல்லது நடக்கும். ரெடியா?” என்று கேட்டிருந்தார்.
 
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஜி.வி. பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் “ கண்டிப்பாக.. கதையை சொல்லுங்கள் மேடம். பிடித்திருந்தால் கண்டிப்பாக நடிக்கிறேன். காக்கா முட்டை, பரதேசி, கேங்ஸ் ஆப் வாசிபூர், ஆடுகளம் போன்ற படங்களுக்கு இசையமைத்தவன் நான்தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம் பெண்ணால் வலையில் சிக்கிய வேந்தர் மூவிஸ் மதன்...