Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1500ஐ நெருங்கியது இன்றைய கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் எவ்வளவு?

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (19:58 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 1437 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 869,804ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1437 பேர்களில் 532பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 9 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 12,618ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 902 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 848,041 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 75,827 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 186,10,138 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments