Publish Date: Thu, 16 Jun 2022 (13:30 IST)
Updated Date: Thu, 16 Jun 2022 (13:32 IST)
10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியாகும் என்று தமிழக தேர்வுத்துறை இயக்கம் தெரிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் வரும் 20ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவர இருப்பதை அடுத்து சங்கரன்கோவில் அருகே ஆராய்ச்சி பட்டி என்ற பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் பிரபாகரன் என்பவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்
அவர் தனது தேர்வு முடிவு எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் கடந்த சில நாட்களாக இருந்ததாகவும் நாளை தேர்வு முடிவு என்ற தகவல் வெளியானதும் அவரது அச்சம் அதிகமானதாக கூறப்படுகிறது
இந்நிலையில் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
siva
Publish Date: Thu, 16 Jun 2022 (13:30 IST)
Updated Date: Thu, 16 Jun 2022 (13:32 IST)