உத்தரபிரதேச மாநிலத்தில் வீடுகளை இடிக்க தடை என்றும் ஏற்கனவே இடித்த வீடுகள் குறித்து உத்தரப்பிரதேச மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உபி மாநிலத்தில் போராட்டம் செய்யும் நபர்களை குறிவைத்து அவர்களுடைய வீடுகளை அம்மாநில அரசு இடித்து வருவதாக கூறப்பட்டது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது
இந்த விசாரணையின்போது உத்தரபிரதேசத்தில் விதிகளை மீறி வீடுகளை இடிக்க தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் உரிய விதிகளை பின்பற்றாமல் ஏற்கனவே வீடுகள் இடிக்கப்பட்டது குறித்து உத்தரபிரதேச மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது