தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் திடீர் ஆய்வு.. 1538 டன் அரிசி வீணாகிய அதிர்ச்சி தகவல்..!

Mahendran
வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (14:31 IST)
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்கை சட்டமன்றக் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 1,538 டன் அரிசி வீணானது கண்டறியப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கடந்த 2022-ஆம் ஆண்டு இருப்பு வைக்கப்பட்ட இந்த அரிசி, மனிதர்கள் சாப்பிடுவதற்கு தகுதியற்றதாக மாறிவிட்டதை பொது நிறுவனங்களின் ஆய்வு குழுவினர் கண்டறிந்தனர்.
 
இதையடுத்து, வீணான அரிசியை கால்நடை தீவனமாகப் பயன்படுத்தலாம் என சட்டமன்றக் குழுவினர் பரிந்துரைத்தனர். மேலும், உரிய காலத்தில் மக்களுக்கு விநியோகம் செய்யாமல் அரிசியின் தரம் குறைய காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் அரசுக்கு வலியுறுத்தினர். 
 
இதுகுறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என குழுவின் தலைவர், எம்.எல்.ஏ. நந்தகுமார் தெரிவித்தார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments