Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

1.16 கோடி பெண்களும் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள்- அமைச்சர் கீதா ஜீவன்

Advertiesment
geetha jeevan

Sinoj

, செவ்வாய், 12 மார்ச் 2024 (20:47 IST)
உரிமைத்தொகையைப் பெறும் 1 கோடியே 16 லட்சம் பெண்ணையும் இழிவுப்படுத்தி அவர் பேசியிருப்பது மிகவும் வருத்தத்தைத் தருகிறத என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு முதலமைச்சர் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைப் பற்றி மிக இழிவாக பேசியிருக்கிறார்.

உரிமைத்தொகையைப் பெறும் 1 கோடியே 16 லட்சம் பெண்ணையும் இழிவுப்படுத்தி அவர் பேசியிருப்பது மிகவும் வருத்தத்தைத் தருகிறது.

நீங்கள் கோடியில் புரள்பவர், பணவசதி படைத்தவர், நீங்கள் பெரிய நடிகர்  உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் அப்படித்தான் தெரியும். ஆனால், ஆயிரம் ரூபய் வைத்துக் குடும்பம் நடத்துகிற, வாழ்வாதாரத்துக்காக, ஒரு மருத்துவச் செலவுக்காக, பிள்ளைகளின் படிப்பிற்காக,  எத்தனையோ,  பேருக்குப் பலன் தருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நீங்கள் உங்கள் போக்குக்கு வார்த்தைகளை இப்படி பயன்படுத்தாதீர்கள்… நிச்சயமாக இதற்கு 1 கோடியே 16லட்சம் மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் உங்களுக்குச் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.480 கோடி போதைப்பொருள்கள் பறிமுதல்..! பாகிஸ்தானை சேர்ந்த 6 பேர் கைது..!!