Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

Advertiesment
ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24
, சனி, 29 டிசம்பர் 2018 (17:32 IST)
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

குடும்பங்களை மதிக்கும் உண்ணதமான எண்ணம் கொண்ட ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் புத்தி கூர்மை அதிகரிக்கும். எதைச் செய்தாலும் நிறுத்தி நிதானத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளிடம் பாராட்டு வாங்குவார்கள்.  குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் உங்களிடம் அண்பு காட்டுவார்கள்.

பெண்களுக்கு அவசர முடிவுகள் எடுக்குபோது ஒரு தடவைக்கு யோசித்து முடிவெடுப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்ல்து. அரசியல்துறையினருக்கு பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீதுர்க்கை அம்மனை அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23