Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31

Advertiesment
ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31
, சனி, 29 டிசம்பர் 2018 (17:28 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

வாழ்க்கையில் பலவகை சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறியும் திறனுடைய  நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் தீர்வு ஏற்படும். மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.

பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது.  கலைத்துறையினருக்கு முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். அரசியல்துறையினருக்கு புதிய நட்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.

பரிகாரம்: திங்களன்று அம்மனை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனவரி மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30