Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பரான சுவையில் மாங்காய் மீன் குழம்பு செய்ய !!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (16:47 IST)
தேவையான பொருட்கள்:

மீன் - அரை கிலோ
மாங்காய் - 1
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
பச்சை மிளகாய் -2
இஞ்சி - சிறியதுண்டு
பூண்டு - 6 பல்
கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
புளி - சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
வெந்தயம் - அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
தனியா (மல்லித்தூள்) - 3 டீஸ்பூன்
சீரகத்தூள் - கால்ஸ்பூன்
மிளகுத்தூள் - கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தேங்காய்ப் பால் - 1 சிறிய கப்



செய்முறை:

முதலில் மீனை சுத்தம் செய்து கழுவி  மஞ்சள் தூள், உப்பு போட்டு அலசி வைக்கவும். வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு,மல்லி இலை பொடியாக நறுக்கிய  வைக்கவும்.சிறிய மாங்காய் ஒன்றை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

தேவையான அளவு புளியை ஊறவைத்து,தேங்காய் அரைத்து கொள்ளவும். கடையில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை தாளித்து அத்துடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். தக்காளி, பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து மூடவும்.

அத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கி கரைத்த புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும். மசாலா வாசனை அடங்கி குழம்பு மணம் வரும்போது மீனை போடவும்.

மீனை சேர்த்த பிறகு சிறிது கொதி வரும்போது நறுக்கிய மாங்காய் துண்டுகளை சேர்க்கவும். மாங்காயும் மீனும் வெந்து வரும் போது அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். நன்கு குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான மாங்காய் மீன் குழம்பு தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments